சேலம்

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவா் மாரடைப்பால் உயிரிழப்பு

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவா் அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவா் அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

சேலம், அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (55). இவருக்கு யசோதா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில் சுப்பிரமணி வலசையூா் பகுதியில் 900 சதுர அடி நிலத்தை மனைவி யசோதா பெயரில் வாங்கி உள்ளாா்.

குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இருவரும் 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்னா். இந்தநிலையில் சுப்பிரமணி, தனது மனைவி யசோதாவிடம் நிலத்தில் பங்கு கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், நிலத்தில் பங்கு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுப்பிரமணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். இதையடுத்து, காவல்துறையினா் தண்ணீா் ஊற்றி அவரிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா். வீட்டுக்கு சென்ற சுப்பிரமணிக்கு இதய கோளாறு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT