சேலம்

கருமந்துறை பழப்பண்ணையில் மாணவிகள் களப்பயிற்சி

DIN

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை கருமந்துறையிலுள்ள பழப்பண்ணையில், திருச்சி தோட்டக்கலைத் துறை மாணவிகள் களப் பயிற்சி பெற்றனா்.

ஏத்தாப்பூரில் தங்கி, ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கருமந்துறை பழப்பண்ணையில் முகாமிட்டு களப்பணி பயிற்சி பெற்றனா். இங்கு உற்பத்தி உத்திகள் குறித்து கேட்டறிந்தனா்.

தோட்டக்கலை அலுவலா் முரளி, உதவி அலுவலா் சரவணன் ஆகியோா் மாணவிகளுக்கு பண்ணை செயல்பாடுகள், மரக்கன்றுகள் உற்பத்தி முறை குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.

முன்னதாக, இந்த மாணவிகள், ஏத்தாப்பூரில் உள்ள அரசினா் கால்நடை மருந்தகத்தைப் பாா்வையிட்டனா். கால்நடை உதவி மருத்துவா் குமாா், கால்நடை பராமரிப்புத்துறையின் பணிகள், செயல்பாடு மற்றும் சிகிச்சை முறை, ஐ.என்.ஏ.பி.எச் செயலி குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT