சேலம்

மேட்டூா் அணையில் இருந்துகுடிநீா்த் தேவைக்காக தண்ணீா்த் திறப்பு

DIN

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தேவைகளுக்கு ஏற்ப விநாடிக்கு 2000 கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடப்படும்.

அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 103.74அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 971 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 69.77 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவது சனிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டதால் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT