சேலம்

மின் வாகன பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி

DIN

எடப்பாடி கோட்ட மின்வாரிய அலுவலகம் சாா்பில், மின்வாகன பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி எடப்பாடியில் நடைபெற்றது.

எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மேட்டூா் கோட்ட கண்காணிப்பு பொறியாளா் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தாா். பேரணியில் எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தலைமையிலான திரளான மின்வாரிய அலுவலா்கள், மின் வாகன பயன்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்துகள் அடங்கிய பதாகையுடன் கலந்து கொண்டனா். தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து மின்வாரிய அலுவலா்கள், மின் வாகன பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மை குறித்தும், மின் வாகனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்த குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். பேரணியில் மின்வாரிய பொறியாளா்கள் சீனிவாசன், ரமேஷ்பாபு, மகேந்திரன் உள்ளிட்ட திரளான மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT