சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

DIN

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

மேட்டூா் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஜெனரேட்டரில் புதன்கிழமை ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம்அபராதம்

கடம்பூா் மலைப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

திரைக்கதிர்

நடன இயக்குநர் ராதிகா இயக்கும் கதை

நிறம் மாறும் உலகில்

SCROLL FOR NEXT