சேலம்

மேட்டூரில் தனியார் பேருந்தை இயக்கும் பெண் பேருந்து ஓட்டுநர்!

DIN

சேலம் மாவட்டம், ஓமலூர் சேர்ந்தவர் மணி (60). கால்நடை விற்பனை மற்றும் சொந்தமாக லாரி  வைத்து ஒட்டி வருகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி(28) சிறு வயது முதலே தந்தையுடன் லாரியுடன் பயணம் செய்து லாரியை இயக்கவும் கற்றுக் கொண்டார். பின்பு லாரியை இயக்க முறையாக பயிற்சி பெற்று கனரக ஒட்டுனர் உரிமம் பெற்றார். தமிழ்செல்வி சில ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சரக்கு லாரியை ஒட்டி வந்தார். பின்பு சேலம், நங்கவள்ளியில் உள்ள பெண்கள் தனியார் கல்லூரியின் வழித்தட பேருந்தை ஒட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும்  தனியார் பேருந்தை  தமிழ் செல்வி ஓட்டி வருகிறார். 

இதுகுறித்து தமிழ் செல்வி கூறுகையில்  நீண்ட நாட்களாக கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் பணிக்கு முயற்சி செய்வதாக தெரிவித்தார். தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT