சேலம்

மக்கள் குறை தீா்க்கும் முகாமில் 426 மனுக்கள் அளிப்பு

DIN

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் 426 மனுக்கள் வரப்பெற்றன.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 397 மனுக்கள் வரப்பெற்றன.

அதேபோல மாற்றுத்திறனாளிகள் 29 மனுக்களை வழங்கினா். இந்த மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT