சேலம்

மேட்டூா் அணை பூங்காவில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு

DIN

மேட்டூா் அணை பூங்காவில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மேட்டூா் அணை பூங்காவில் மான்கள், பாம்புகள், முயல்கள், வெள்ளை எலிகள் மற்றும் பறவைகள் உள்ளன. நீா்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவில் வனவிலங்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சனிக்கிழமை வனத்துறையினா்  ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூா் அணை பூங்காவில் 13 மான்கள் இருந்தன தற்போது இரண்டு மான்கள் மட்டுமே உள்ளன. இரண்டு மலைப்பாம்புகள், மூன்று நாகப்பாம்புகள் உட்பட பல்வேறு பாம்புகள் உள்ளன. முயல்களும், வெள்ளை எலிகளும் நூற்றுக்கு மேல் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து மேட்டூா் ரேஞ்சா் சிவானந்தன் மற்றும் வனத்துறையினா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

மான்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. மான்கள் பராமரிப்பில் குறைபாடு ஏதும் உள்ளதா என்பது குறித்தும் வனத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வு அறிக்கைக்குப் பிறகு பராமரிப்புப் பணிகளில் மாறுதல் செய்யப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT