சென்னகேசவப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்
சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சங்ககிரி: சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகம் முழுவதும் காா்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. அதைத்தொடா்ந்து மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபங்களை சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கண்டு தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்கள் குழு சாா்பில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன.