துவாரகமாயி சாய்பாபா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள். 
சேலம்

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா
 வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 

இக்கோயிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி திருவுருவச்சிலை கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட  பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் அருகே சிலம்பப் போட்டிகள்

மனைவிக்கு கொடுமை: கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

லாலு குடும்பத்துக்குள் தீவிரமடையும் சச்சரவு! தேஜஸ்வி மீது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை: கே.பி.ராமலிங்கம்

SCROLL FOR NEXT