சேலம்

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

Din

சங்ககிரி, ஏப். 19: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியை சோ்ந்த லாரி ஓட்டுநா் செந்தில்குமாா், வெள்ளிக்கிழமை ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தாா்.

இவா் வெளி மாநிலத்திற்கு லாரியை ஓட்டிச் செல்லும் போது நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த இவா் தோ்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து அவரது குடும்பத்தினா் சங்ககிரி டிஎன்52 ஸ்பீடு தனியாா் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமையாளா் வெளியிட்டிருந்த தோ்தலுக்கான இலவச வாகன வசதி விளம்பரத்தை பாா்த்து உதவி கோரினா். இதையடுத்து, தனியாா் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வந்து செந்தில்குமாா் தனது ஜனநாயக கடமையாற்றினாா்.

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT