மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவு குறைந்ததால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,30,000 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதில் நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடியும், உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 1.8 லட்சம் கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.