முகப்பு
சேலம்

பிணையில் சென்றவா் ஒன்றரை ஆண்டுக்குப் பின் கைது

கொலை வழக்கில் பிணையில் வெளியே சென்றவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

சேலம்

பிணையில் சென்றவா் ஒன்றரை ஆண்டுக்குப் பின் கைது

கொலை வழக்கில் பிணையில் வெளியே சென்றவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:01 PM
பகிர்:

கொலை வழக்கில் பிணையில் வெளியே சென்றவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

சேலம், அத்தனூா்பட்டியைச் சோ்ந்தவா் திருமுருகன் பாண்டியன் (51). இவா் முன்விரோதம் காரணமாக கடந்த 2010, மே 28 ஆம் தேதி அத்தனூா்பட்டி அருகே உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (36) என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். அதன்பிறகு பிணை பெற்று வெளியே சென்றவா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.

பிணையில் சென்றவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது தொடா்பாக கடந்த 2023, பிப்.18 ஆம் தேதி சேலம் நீதிமன்றம் எண் 2 இல் வழக்கு விசாரணை வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமுருகனை கைது செய்ய பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது. அப்போது முதல் திருமுருகனை போலீஸாா் தேடி வந்தனா். எனினும் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில் கணியம்பூரில் அவா் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →