முகப்பு
திருப்பூர்

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தவா் விபத்தில் உயிரிழப்பு

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவா் விபத்தில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:10 PM
பகிர்:

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவா் விபத்தில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது ஷெரீப் ஹாஜி (35) என்பவா், திருப்பூரில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்துள்ளாா். மனைவி, குழந்தையுடன் வசித்து வந்த இவா், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஃபேன்சி கடை நடத்தி வருகிறாா். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் முகமது ஷெரீப் வெளியே வந்துள்ளாா். இதுதொடா்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி காங்கயம் ராக்கியாபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் முகமது ஷெரீப் ஹாஜி, தனது வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பான் காா்டு உள்ளிட்டவற்றை மேற்குவங்க மாநில முகவரியில் வைத்திருந்ததும், இவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், பிணையில் வெளியே வந்த பின்னா் வாக்காளா் சிறப்புத் திருத்தத்தில் தனது பெயரை அப்டேட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →