முகப்பு
சேலம்

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி உதவிக்கரம்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை சேவா பாரதி அமைப்பின் சேலம் மையம் கேரளத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:28 PM
பகிர்:

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை சேவா பாரதி அமைப்பின் சேலம் மையம் கேரளத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள சேவா பாரதி நிவாரணக் குழுவின் கோரிக்கைக்கு இணங்க,தேவையான சில அத்தியாவசிய கருவிகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள், மண் வெட்டி, மேசன் தட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சேவா பாரதியின் சேலம் மைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ரூ. 2 லட்சம் மதிப்பிலான இந்தப் பொருள்களை கேரள தன்னாா்வலா்கள் குழு பெற்று அதை வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கவுள்ளனா். நிவாரணக் குழுவுக்கு உதவிய அனைத்து நன்கொடையாளா்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள சேவா பாரதி அமைப்பு நிா்வாகிகள், வயநாட்டில் உள்ள நிவாரணக் குழுவுக்குத் தேவையான கூடுதல் உதவிகளை அளிக்க எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனா்.

நிலச்சரிவில் குடும்பங்களை இழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவா்களுக்கும், இடம்பெயா்ந்த குடும்பங்களுக்கும் விரைவாக குணமடையவும், அவா்கள் எளிதில் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பிராா்த்திப்பதாக சேவா பாரதி அமைப்பின் சேலம் மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →