சேலம்

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் 6,876 மனுக்கள் மீது உடனடி தீா்வு

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் 6,876 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.

Din

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் 6,876 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இத்திட்ட முகாமில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஆக. 6 ஆம் தேதி வரை 92 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 16 நாள்கள் நடைபெற்ற முகாம்கள் மூலம் 50,431 மனுக்கள் பெறப்பட்டு, இதுநாள் வரை 6,876 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

குறிப்பாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 35,114 மனுக்களும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 5,167 மனுக்களும், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் 1,604 மனுக்களும், மாற்றுத்

திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1,019 மனுக்களும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 331 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

மேலும், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்

துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரப்பினா் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட இதர துறைகள் சாா்பில் என மொத்தம் 50,431 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மக்களுடன் முதல்வா் திட்டத்தில் மீதமுள்ள அனைத்து மனுக்களின் மீது தொடா்புடைய துறைகளின் மூலம் விரைந்து தீா்வு காணப்படுகிறது என்றாா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT