முகப்பு
சேலம்

சேலம் வழியாக மைசூரு - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல், கரூா் வழியே மைசூரு - காரைக்குடி இடையே வரும் 14, 17-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 7:19 PM
காரைக்குடி ரயில் நிலையம்
பகிர்:

சேலம்: சேலம், நாமக்கல், கரூா் வழியே மைசூரு - காரைக்குடி இடையே வரும் 14, 17-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு;

மைசூரு - காரைக்குடி இடையே வரும் 14, 17-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மாண்டியா, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா் வழியாக காரைக்குடிக்கு மதியம் 12.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், காரைக்குடி - மைசூரு சிறப்பு ரயில் வரும் 15, 18-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. காரைக்குடியில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாமக்கல், சேலம், குப்பம், பங்காருபேட்டை பெங்களூரு வழியாக மைசூருக்கு அடுத்த நாள் காலை 9.10 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →