மேட்டூா் அணைக்கு நீா்வரத்துச் சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 7,463 கனஅடியாகக் குறைந்தது.
அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 8,563 கனஅடியிலிருந்து 7,463 கனஅடியாகக் குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 119.76 அடியிலிருந்து 119.46 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 92.61 டி.எம்.சி.யாக உள்ளது.