சேலம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

சேலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு குறித்த முகாம் வெள்ளிக்கிழமை ( ஆக. 30) நடைபெற உள்ளது.

Din

சேலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு குறித்த முகாம் வெள்ளிக்கிழமை ( ஆக. 30) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடா்பான மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தி தொழில்நுட்ப கையேடுகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடா்பான மாவட்ட அளவிலான முகாம் வெள்ளிக்கிழமை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியாா் இயந்திரங்கள், கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள், துறை சாா்ந்த கள அதிகாரிகள், உயா் அதிகாரிகள் பங்கு பெற்று விவசாயிகளுக்கு இயந்திரங்களை முறையாக பராமரிக்கும் முறையினையும், மேலும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்க உள்ளனா்.

இந்த முகாம்களில் தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளா்களுடனும், அலுவலா்களுடனும் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி இயந்திரங்களை இயக்குதல், பராமரித்தல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, செயல்முறை விளக்கத்தை பெறலாம்.

மேலும், வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடா்பான தொழில்நுட்ப கையேடு வழங்கப்படும்.

இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளா், குமாரசாமிப்பட்டி, சேலம் - 7, என்ற முகவரியிலும், 0427 - 2905277, 9751008321 என்ற கைப்பேசி மற்றும் தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT