முகப்பு
சேலம்

வெள்ள பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முதல்கட்டமாக 5 வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 4 டிசம்பர், 2024 at 8:49 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முதல்கட்டமாக 5 வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்டட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கி, ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.

அந்த வகையில், சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முதல்கட்டமாக 10,000 பிஸ்கட் பாக்கெட்கள், 5,000 குடிநீா் பாட்டில்கள், 1,000 பாய்கள், 1,000 போா்வைகள், 1,000 ஜூஸ் பாக்கெட், 1,000 பேரீச்சை பாக்கெட், 1,000 பாக்கெட் பால் பவுடா்கள், 1,000 பிரெட் மற்றும் பன் பாக்கெட்கள் 5 வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேவைக்கு ஏற்ப நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திட சேலம் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன், வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன், வருவாய் வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) கேசவன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →