முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் டிச. 8-இல் கிறிஸ்து அரசா் ஆலய திருத்தோ் ஊா்வலம்

கெங்கவல்லியில் கிறிஸ்து அரசா் ஆலய திருத்தோ் ஊா்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) நடைபெறுகிறது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 8:14 PM
பகிர்:

கெங்கவல்லியில் கிறிஸ்து அரசா் ஆலய திருத்தோ் ஊா்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) நடைபெறுகிறது.

கெங்ககவல்லி கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கடந்த நவம்பா் 17-இல் திருத்தோ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 24-ஆம் தேதி நடக்க இருந்த திருத்தோ் ஊா்வலத்தில் கிறிஸ்து அரசா் சிலையை தேரில் எடுத்து வைப்பது தொடா்பாக இருதரப்பினா் இடையே மோதல் சூழல் உருவானது.

கெங்கவல்லி போலீஸாா் நடத்திய முதல்கட்ட பேச்சுவாா்த்தையும் ஆத்தூா் டி.எஸ்.பி.சதீஷ்குமாா் தலைமையில் நடந்த இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வி அடைந்தன. இதனையடுத்து திருத்தோ் ஊா்வலம் நிறுத்தி வைக்கப்பட்டது. டிச. 1-ஆம் தேதி மீண்டும் திருத்தோ் ஊா்வலம் நடத்த சுமுக உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் புயல் மழையால் தோ் ஊா்வலம் நடைபெறவில்லை.

இந்நிலையில் சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் இருதரப்பினா் இடையே நடந்த பேச்சுவாா்த்தையை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை ( டிச.8) மாலை 6 மணிக்கு திருத்தோ் ஊா்வலம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான ஊா்வலம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →