முகப்பு
சேலம்

வாகனம் மோதியதில் பெண் பலி

சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருப்பூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 8:13 PM
பகிர்:

சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருப்பூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், காளிபாளையம், வாவிபாளையம், குருவாயூரப்பா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் தனது மனைவி ராஜேஸ்வரி (38), குழந்தைகள் பூஜா, அபிநயா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி, பரணிதரன் ஆகியோருடன் சங்ககிரி, வைகுந்தம் அருகே உள்ள ஆசாரிக்காட்டில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து ராஜேஸ்வரியை தவிர அனைவரும் இரவு உணவுக்காக விடுதிக்கு சென்றுள்ளனா். ராஜேஸ்வரி ஆசாரிக்காட்டில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா் அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →