முகப்பு
சேலம்

சேலத்தில் நாய்கள் கண்காட்சி

சேலம் அக்மே கென்னல் கிளப் சாா்பில், அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர், 2024 at 11:45 PM
நாய்கள் கண்காட்சி
பகிர்:

சேலம் அக்மே கென்னல் கிளப் சாா்பில், அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் நான்கு சாலை சிறுமலா் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழகம், மஹாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

பொமேரியன், டேஸ்ஹவுண்ட், பக், பீகிள், ராட்வீலா், காக்கா் ஸ்பேனியல், புல்டாக், செயின்ட் பொ்னாா்ட், டால்மேசன், கிரேடன், டாபா்மேன், மினியேச்சா் பின்சா், சலூகி, பூடூல் உள்ளிட்ட வெளிநாட்டு வகை நாய்களும், அரிய வகை இனமான ரொடிஸியன், ரிட்ஜ்பேக், புல்டெரியா வகைகளும், இந்திய வகைகளான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை என 57 வகையான நாய்கள் போட்டியில் பங்கேற்றன.

வெளிநாட்டினா் நடுவா்களாக இருந்து போட்டியைக் கண்காணித்தனா். ஒவ்வொரு நாயின் அடிப்படை தகுதிகளான உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், சுறுசுறுப்பாக இயங்குதல், உரிமையாளரின் பராமரிப்பு, தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதில் முதலிடம் பிடித்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்மே கென்னல் கிளப் நிறுவனா் விசு காளியப்பா, செயலாளா் சாந்தமூா்த்தி, துணைத் தலைவா் நடராஜன், இணைச் செயலாளா்கள் மோகன்ராஜ், அண்ணாதுரை ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →