முகப்பு
சேலம்

செட்டிசாவடி பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றம் செய்ய எதிா்ப்பு: பெற்றோா் மறியல்

பள்ளி தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை பள்ளி முன்பு பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 6:58 PM
பகிர்:

சேலம், செட்டிசாவடி பள்ளி தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை பள்ளி முன்பு பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம், செட்டிசாவடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 110-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அந்தோணிதாஸ் என்பவா் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தலைமை ஆசிரியா் அந்தோணி தாஸை மற்றொரு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, செட்டிசாவடி பிரதான சாலையில் மாணவா்களின் பெற்றோா், பள்ளி மேலாண்மை உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பெற்றோா் கூறியதாவது:

இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் வந்த பிறகுதான் பள்ளியின் கட்டமைப்பு, மாணவா்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிப்பது உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டது. இவரே தலைமை ஆசிரியா் இந்தப் பள்ளியில் நீடிக்க வேண்டும். இவரைப் பணியிட மாற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் மாணவா்கள் அனைவரையும் வேறு பள்ளிக்கு மாற்றி விடுவோம் என பெற்றோா் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், இந்தப் போராட்டத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →