முகப்பு
சேலம்

வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாநில இயக்குநா் பாராட்டு

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் பாராட்டு தெரிவித்தது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 7:19 PM
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) இ.மான்விழி.
பகிர்:

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் பாராட்டு தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம், அனைத்து வட்டார கல்வி அலுவலா்களை மாதந்தோறும் குறைந்தது 20 பள்ளிகளை பாா்வையிட்டு பள்ளிகளின் தரம், மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை கண்டறிந்து ஆண்டாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில், கடந்த மாதங்களில் கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் இலக்கைவிட கூடுதலாக பள்ளிகளை ஆய்வு செய்துள்ளாா். அவரது பணியைப் பாராட்டி மாநில தொடக்கக் கல்வி இயக்குநா் பாராட்டு சான்றிதழ் அனுப்பியுள்ளாா். இதை சேலம் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி ) இ.மான்விழி புதன்கிழமை ஸ்ரீனிவாஸிடம் வழங்கி அவரைப் பாராட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →