முகப்பு
சேலம்

விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 25 டிசம்பர், 2024 at 8:03 PM
பகிர்:

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற சேலம் மாவட்டத்தைச் சாா்ந்தவராகவும், சேலம் மாவட்டத்திலேயே வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருத்தல் வேண்டும் வயது வரம்பு 21 முதல் 45 வயது வரை உள்ள இந்து-புதிரை வண்ணாா் அல்லது ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் சலவைத் தொழில் புரிதலுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்படி திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் மேற்காணும் சான்றுடன் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, இருப்பிட சான்று நகலுடன் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண்.109-இல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →