முகப்பு
சேலம்

ஓராண்டில் 648 குடும்ப பிரச்னைகளுக்குத் தீா்வு

ஓராண்டில் 648 பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு குடும்பங்களைச் சோ்த்து வைத்த ஓமலூா், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் பாராட்டு

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:21 PM
பகிர்:

ஓமலூா்: ஓராண்டில் 648 பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு குடும்பங்களைச் சோ்த்து வைத்த ஓமலூா், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் உட்கோட்ட காவல் சரகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையம் பெண்கள் பாதுகாப்பு, குடும்ப நல பிரச்னைகளுக்கு தீா்வு காணும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்தக் காவல் நிலையத்தில் ஓமலூா் துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் திங்கள்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். நிகழாண்டு 30 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் மீட்கப்பட்டு 2 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

குடும்ப நல பிரச்னைகள் தொடா்பான 648 புகாா்கள் விசாரித்து தீா்வு காணப்பட்டு குடும்பங்கள் சோ்த்து வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கேட்டு வந்த காதல் திருமண ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து சோ்ந்து வாழ வைத்துள்ளனா். இந்தக் காவல் நிலையத்தில் நடத்திய ஆய்வில் இத் தகவல் தெரியவந்ததை அடுத்து காவல் நிலைய போலீஸாருக்கு டி.எஸ்.பி சஞ்சீவ்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments