பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கடந்த 7.11.2013-இல் அத்துமீறி வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடம்பூரைச் சோ்ந்த சோ்மராஜை (62) கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
Advertisement
Advertisement
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி வசீத்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சோ்மராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக பூங்குமாா் முன்னிலையானாா்.