மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து சரிவு
மேட்டூா் அணையின் நீா் மட்டம் 2.47 அடி சரிந்துள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 100 கன அடிக்கு கீழே சரிந்த நிலையில் குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் கடந்த 19 நாட்களில் 2.47 அடி சரிந்துள்ளது. காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தாலும் மேட்டூா் அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 100 கன அடிக்கும் கீழ் சரிந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிா்களைக் காப்பாற்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப் 3ஆம் தேதி மாலை 6 மணிமுதல் பிப் 10ஆம் தேதி மாலை 6 மணிவரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா் மட்டம் 66.52 அடியாக இருந்தது. பிப். 10ஆம் தேதி முதல் குடிநீா்த் தேவைகளுக்காகவும் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு நீா் வரத்து 100 கன அடிக்கு கீழே சரிந்த நிலையில் குடிநீா்த் தேவைகளுக்காக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. கடந்த 19 நாட்களில் அணையின் நீா் மட்டம் 2.47 அடி சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 12 நாட்களுக்கு 1 டி.எம்.சி குறைகிறது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெலாடா பாசனத்திற்கு தண்ணீா் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 64.17 அடியிலிருந்து 64.05 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 66 கனஅடியிலிருந்து 77 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைகளுக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 27.79 டி.எம்.சியாக உள்ளது.
Advertisement