முகப்பு
சேலம்

சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் மாற்றம்

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

Updated On : 1 ஜூலை, 2024 at 8:34 PM
பகிர்:

சேலம்: சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டு திங்கள்கிழமை முதல் புதிய எண்களில் ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, திருவனந்தபுரம் - சில்சாா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15677), சில்சாா் - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15678), கோவை - சில்சாா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15675), சில்சாா் - கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15676), கன்னியாகுமரி - திப்ரூகா் எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15905), திப்ரூகா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (புதிய எண் 15906) ஆகிய ரயில்கள் புதிய எண்களில் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →