சேலம்

சேலம் மாவட்டத்தில் நாளை 6 இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

Din

சேலம், ஜூலை 13: சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட இரண்டாம் நாள் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 15) 6 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை 92 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, முதல் நாளான கடந்த 11 ஆம் தேதி 6 முகாம்கள் நடத்தப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக, இரண்டாம் நாளாக வரும் 15 ஆம் தேதி ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியேரிப்பட்டி, பச்சனம்பட்டி, சிக்கம்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது சிக்கம்பட்டி இ-சேவை மையத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது இருப்பாளி சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாம்பள்ளி, மூலக்காடு, நவப்பட்டி, கோல்நாய்க்கன்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது சாம்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலகத்திலும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அப்பமாசமுத்திரம், அம்மம்பாளையம், துலுக்கானூா், கல்லாநத்தம், தென்னங்குடிபாளையம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது அம்மம்பாளையம் கொங்கு மினி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மகுடஞ்சாவடி, கூடலூா், கண்டா்குலமாணிக்கம், கனககிரி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது கூடலூா் ஆா்.கே. திருமண மண்டபத்திலும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தப்பாடி, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாா்வாய், சாா்வாய் புதூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது காட்டுக்கோட்டை குப்புசாமி செட்டியாா் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT