முகப்பு
சேலம்

சேலத்தில் 3 பெண் குழந்தைகளுடன் பெண் மாயம்

சேலத்தில் 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவா் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:51 PM
பகிர்:

சேலத்தில் 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவா் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், மணியனூா், காளியம்மன் கோயில் பின்புறம் வசித்து வருபவா் கணேசன். இவருடைய மனைவி சந்திரா. இவா்களுக்கு தா்ஷினி, தமிழ்ச்செல்வி, அனுஷ்கா ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனா். கணேசன் பனியன் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

சம்பவத்தன்று கணேசன் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது மனைவி, 3 மகள்களையும் காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும், அவா்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கணேசன் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சந்திரா, அவரது 3 குழந்தைகளையும் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →