பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை
பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் தொழுகையின் போது ஒரு மசூதியில் நுழைந்து மூன்று சகோதரர்களைக் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை கடத்திச் சென்றனர்.
அதில் இரண்டு காவலர்களை கொலைசெய்து அவர்களின் உடல்களை மார்வாட் கால்வாய் சாலையில் வீசிச் சென்றனர். அதே நேரத்தில் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக இருந்த மூன்றாவது சகோதரர் கடத்தல்காரர்களின் காவலில் உள்ளார்.
Advertisement
Advertisement
மூன்றாவது கைதியை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், 10 முதல் 12 ஆயுதம் ஏந்திய நபர்கள் மசூதிக்குள் நுழைந்து, பிணைக் கைதிகளாக 3 பேரைப் பிடித்து, தப்பிச் சென்றதாகக் கூறினர்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.