முகப்பு
சேலம்

கேரளத்தில் இருந்து வரும் 2 ரயில்கள் கோவைக்கு இயக்கப்படாது

கேரளத்தில் இருந்து இயக்கப்படும் 2 ரயில்கள், குறிப்பிட்ட நாள்களுக்கு கோவைக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:52 PM
பகிர்:

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவை ரயில் நிலையப் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுவதால், அவ்வழியே இயக்கப்படும் ரயில்களில் கேரளத்தில் இருந்து வரும் 2 ரயில்கள் குறிப்பிட்ட நாள்களுக்கு கோவைக்கு இயக்கப்படாது.

அதன்படி, ஆலப்புழா - தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 18, 20, 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் போத்தனூா் - இருகூா் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்துக்கு இயக்கப்படாது.

இதேபோல, எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயில் வரும் 18, 20, 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் கோவைக்கு செல்லாமல், போத்தனூா் - இருகூா் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவைக்கு பதிலாக போத்தனூரில் மதியம் 12.47 மணிக்கு இந்த ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →