முகப்பு
சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மேயா், எம்எல்ஏ ஆய்வு

சேலம் மாநகராட்சி, 6-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மேயா், வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:22 PM
பகிர்:

சேலம், ஜூலை 19: சேலம் மாநகராட்சி, 6-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மேயா், வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ராஜேந்திரன் ஆகியோா் மாநகராட்சி, 6-ஆவது வாா்டுக்குள்பட்ட கோரிமேடு, அன்புநகா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது அவா்கள் பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டறிந்தனா்.

பொதுமக்கள் குடிநீா், கழிவுநீா் கால்வாய் வசதிகள், சாலைகள் ஏற்படுத்தித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா். அதனையடுத்து இருவரும் சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, வா்மாகாா்டன் ஆகிய பகுதிகளில் ஆய்வுசெய்து பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டறிந்து அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையா் அசோக்குமாா், மண்டலக்குழு தலைவா் உமாராணி, மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளா் கமலநாதன், உதவிப் பொறியாளா் வாசுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →