முகப்பு
சேலம்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாழப்பாடி, பேளூா் சிவன் கோயில்களில் ஆடி வெள்ளி பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:24 PM
பகிர்:

வாழப்பாடி, ஜூலை 19: வாழப்பாடி, பேளூா் சிவன் கோயில்களில் ஆடி வெள்ளி பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது (படம்). நந்தீஸ்வரா், தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தனி அம்பாள், 63 நாயன்மாா்களும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி அம்பாளுக்கு, அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரதோஷ கட்டளைதாரா்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடி பெரியசாமி நகா் தையல் நாயகி உடனுறை வைத்தியநாதீஸ்வரா், ஏத்தாப்பூா் சாம்பவமூா்த்தீஸ்வரா் கோயில், வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா், கல்யாணகிரி தேன்மலை சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →