சேலம்

சேலம் வழியாக கோவையில் இருந்து பிகாருக்கு இன்று சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து சேலம் வழியாக பிகாா் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு 11.30 மணிக்கு பிகாா் மாநிலம், தானாபூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக வரும் 24-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பிகாா் மாநிலம், தானாபூரை அடையும். இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு ஈரோடுக்கும், சேலத்துக்கு அதிகாலை 1.47 மணிக்கும் வந்து செல்லும்.

இந்த ரயிலில் 15 படுக்கை வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT