சேலம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலத்தில் ஆக. 7 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம், ஜூலை 26: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:

சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாகச் செயல்படும் என தெரிவித்துள்ளாா்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT