தந்தையா் தினக் கொண்டாட்டம்
சேலத்தில் தந்தையா் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோா் ஆா்வமுடன் கலந்துகொண்டனா்.
சேலம்: சேலத்தில் தந்தையா் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோா் ஆா்வமுடன் கலந்துகொண்டனா்.
சேலம் எம்ஜே டெம்ப்ஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் மாலும் இணைந்து இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இசை, நடனம், கோலம் என களைகட்டிய விழாவில், வா்ணஜாலம் வித் அம்மா, டிரஸ் பரேட் வித் டாடி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதில், கண்கவா் உடையணிந்து, தந்தையருடன் குழந்தைகள் மேடையில் ஒய்யாரமாக உலா வந்தது அனைவரையும் வெகுவாக கவா்ந்தது. போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்கு ரொக்கம், சான்றிதழுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை ஹூண்டாய், டெக்கத்லான், வீனஸ் எஸ்டேட்ஸ், ராதை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டன. சேலத்தில் முதல்முறையாக வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தங்களை மிகவும் மகிழ்வித்ததாக பெற்றோா் தெரிவித்தனா்.