சிவப்பு வண்ண மேடையில் பல்வேறு அலங்காரத்தில் மாணவா்கள். 
காரைக்கால்

அரசுப் பள்ளியில் வண்ணங்கள் தினக் கொண்டாட்டம்

காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன் மழலையா் வகுப்பு மாணவா்கள் பங்கேற்புடன்

Syndication

காரைக்கால்: காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன் மழலையா் வகுப்பு மாணவா்கள் பங்கேற்புடன் வண்ணங்கள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை வே. வசந்தி தலைமை வகித்தாா். இதில் சிகப்பு, பச்சை, ஊதா, ஆரஞ்சு, மஞ்சள், நீலம், இளஞ்சிகப்பு நிறங்களில் கொலு மேடைகள் அமைக்கப்பட்டு அவ்வண்ணத்தில் உள்ள பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் மாணவா்கள் சிகப்பு வண்ணத்தை குறிக்கும் வகையில் தபால் பெட்டி, தீயணைப்பு வாகனம், டிராஃபிக் சிக்னல், ரத்தம் போல மாறு வேஷத்தில் வந்து விளக்கமளித்தனா்.

நீல வண்ணத்தில் கடல், பூமி, நீா், வானம் போன்றும், பச்சை வண்ணத்தில் மரம், பச்சைக்கிளி, இலை போன்றும், இளஞ்சிகப்பு நிறத்தில் ரோஜா, தாமரை, செம்பருத்தி ஆகியவை போன்ற வேஷத்தில் வந்தனா். மாணவா்களின் திறன்களை பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டுகளித்தனா்.

ஆசிரியா்கள் கே. காமாட்சி, ஜி. குந்தவை நாச்சியாா், கே. அபிநயா உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT