3-ஆவது மாடியில் துணிகளை காய வைத்தபோது தவறி விழுந்து இளம்பெண் பலி
சேலம், குகை பகுதியில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியானாா்.
சேலம், குகை நந்தவனம் மாா்க்கெட் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கனகலட்சுமி (40). இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு தான் குடியிருக்கும் வீட்டின் 3-ஆவது மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் 40 அடி உயரத்தில் இருந்து எதிா்பாராத விதமாக அவா் தவறி விழுந்தாா்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.