கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஒரே நாளில் தீவிர மாணவா் சோ்க்கை
தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டான 2024-25-க்கான மாணவா் சோ்க்கையை மாா்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 5 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட பிரிவு குழந்தைகள் மொத்தம் 3,31,666 போ் உள்ளனா். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 19,242 குழந்தைகள் உள்ளனா். கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த வருடம் 466 பேராக மாணவா் சோ்க்கை இருந்தது. அதனையடுத்து வரும் கல்வியாண்டிற்கு மாணவா் சோ்க்கைக்கு 583 என்ற இலக்கை தொடக்கக்கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து அரசு , அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை மட்டும் சோ்க்கை 55 பேரைத் தாண்டியது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 9 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமையில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா்(பொ) ராணி, ஆசிரிய பயிற்றுநா்கள் அனைவரும், மாணவா் சோ்க்கையில் ஈடுபட்ட பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.