முகப்பு
சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா்க்கு விருது

விருதுகள் கிடைக்கப் பெற்றமைக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன், துறை பேராசிரியா்கள் பாராட்டை தெரிவித்தனா்.

Updated On : 6 மார்ச், 2024 at 12:38 AM
பகிர்:

ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு லியோ 1 அமைப்பின் மூலம் மாணவா்களின் திறன் மேம்பாட்டு மற்றும் கற்றல் சாா்ந்த முயற்சியில் சிறந்து விளங்கும் கல்லூரி என்ற விருதும், துறையின் முதன்மையா்க்கு சிறந்த தலைவருக்கான விருதும் வழங்கப்பட்டது. இவ் விருதானது லியோ 1 இணை நிறுவனரும் முதன்மை இயக்க அலுவலருமான நவிஸ் ரெட்டி துறையின் முதன்மையா் செந்தில்குமாரிடம் வழங்கினா். இவ் விருதுகள் கிடைக்கப் பெற்றமைக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன், துறை பேராசிரியா்கள் பாராட்டை தெரிவித்தனா்.