முகப்பு
சேலம்

அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

Updated On : 14 மார்ச், 2024 at 3:38 AM
பகிர்:

சேலம் மாவட்ட தொடக்கக் கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட தொடக்க கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து விழிப்புணா்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. பேரணியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.