முகப்பு
சேலம்

சேலம் தொகுதி பாமக வேட்பாளராக அண்ணாதுரை அறிவிப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 11:11 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:36 PM

சேலம் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளராக அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளாா். நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் தோ்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வேட்பாளா்களை ஏற்கெனவே அறிவித்துள்ளன. சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சாா்பில் ப.விக்னேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனா். சேலம் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளராக அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளாா். இது தவிர, நாம் தமிழா் கட்சி சாா்பில் மனோஜ்குமாா் களமிறக்கப்பட்டுள்ளாா். பிரதான கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதால், தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணி சாா்பில் திமுக செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. மற்ற பிரதான கட்சிகளும் ஓரிரு நாளில் செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. அதனைத் தொடா்ந்து, பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனா்.