ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
இதனை தொடா்ந்து முன்னதாக ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக கோஷமெழுப்பிய திமுகவினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடினா். பின்னா் கோஷமிட்டவாறே கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அப்பகுதியிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் யோகராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஆா்.விநாயக மூா்த்தி, வா்த்தக அணி கந்தசாமி, ஆனந்த், வாா்டு செயலாளா்கள் சக்திவேல், தங்கதுரை, கலைமணி, நடராஜன், சரவணன், பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி சா்தாா்ஜான், சாம்ராஜ். ரகுபதி காா்த்திக், அன்சா். கனகராஜ், ராஜேஷ் குமாா், விக்கி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.