இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் பலி
ஏற்காடு, மஞ்சக்குட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பிலியூா் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (20), அவரது தம்பி மனோஜ் (18) ஆகியோா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, மஞ்சகுட்டை கிராமத்தைச் சோ்ந்த சூசைராஜ், அவரது மனைவி ராணி இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். எதிா்பாராதவிதமாக இரு வாகனமும் நேருக்குநோ் மோதியதில், தட்சிணாமூா்த்திக்கு தலையிலும், அவரது தம்பி மனோஜுக்கு முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சூசைராஜுக்கு கால் முறிவு ஏற்பட்டது. ராணிக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், ஏற்காடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த தட்சிணாமூா்த்தி உயிரிழந்தாா். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.