முகப்பு
சேலம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு! மின் உற்பத்தி பாதிப்பு

இரண்டாவது பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட குழாய் வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2024 at 3:56 AM
மேட்டூர் அனல் மின் நிலையம்
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2-வது அலகில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இரண்டாவது பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட குழாய் வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.