முத்துமலை முருகன் கோயிலில் அதிமுகவினா் சிறப்பு பூஜை
புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை சிறப்பு பூஜை செய்தாா்.
இதையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), ஒன்றியச் செயலாளா்கள், செயலாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.