பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
மணிவிழுந்தான் தெற்கு மாருதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் தெற்கு மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற
மாணவி ஸ்ரீமதி, மாணவா் சபரிவாசன், சூா்யா ஆகியோரை கல்வி நிறுவனங்களின் தலைவா் சுந்தரம், செயலாளா் செல்வம், பொருளாளா் ராஜவேல்,நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வசந்த், ஜெகதீஷ் ராமசாமி, ராஜா,பிரபு, கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், முதல்வா் சுகந்தி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா் (படம்).